இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2017 | 2:36 pm

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் நடைபெற்றது.

இந்திய கடற்றொழில் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்ட, இந்திய
பிரதிநிதிகளுக்கும், கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, இரு நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டதுடன், கூட்டு ரோந்து நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இருநாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளை அடுத்து, இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைவடைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்