Bestweb 2018
Bestweb 2018

மன்னாரிலிருந்து படகுமூலம் தமிழகம் சென்றவர் பொலிஸாரிடம் சரண்

மன்னாரிலிருந்து படகுமூலம் தமிழகம் சென்றவர் பொலிஸாரிடம் சரண்

By Bella Dalima

14 Jan, 2017 | 4:09 pm

இலங்கையிலிருந்து படகுமூலம் தமிழகம் சென்றுள்ள ஒருவர் தனுஷ்கோடி பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளார்.

மன்னார் – பேசாலை பகுதியில் வசித்துவந்த குறித்த நபர் உறவினர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் உயிர் பாதுகாப்புக் கருதி தமிழகத்திற்கு தப்பிச்சென்றதாகவும் அங்கு பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், குடும்பத்தகராறு காரணமாக, நீதிமன்றம் வரை பிரச்சினை கொண்டுசெல்லப்பட்ட நிலையில், மனைவியின் உறவினர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக 60 ஆயிரம் ரூபாவை செலுத்தி படகுமூலம் மன்னார் பகுதியிலிருந்து தனுஷ்கோடியை இரவு சென்றடைந்து, நேற்று (13) அங்குள்ள பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

இந்த நபரிடம் தனுஷ்கோடி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கடவுச்சீட்டின்றி சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தமிழக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.