நாடு, வௌ்ளைப் பச்சை அரிசியை எதிர்காலத்தில் 76 ரூபாவுக்கு விற்பனை செய்ய இயலும்

நாடு, வௌ்ளைப் பச்சை அரிசியை எதிர்காலத்தில் 76 ரூபாவுக்கு விற்பனை செய்ய இயலும்

By Bella Dalima

14 Jan, 2017 | 4:36 pm

நாடு மற்றும் வௌ்ளைப் பச்சை அரிசி வகைகளை எதிர்காலத்தில் 76 ரூபாவுக்கு விற்பனை செய்ய இயலுமென அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டார்.

இதனையடுத்து, எந்தவொரு அரிசி வகைக்கும் தட்டுப்பாடு நிலவாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மீது விதிக்கப்பட்டிருந்த 80 ரூபா தீர்வை, கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் அரசாங்கத்தினால் 15 ரூபாவாகக் குறைக்கப்பட்டது.