தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட கைதியை பார்வையிட செல்வம் அடைக்கலநாதனுக்கு அனுமதி மறுப்பு

தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட கைதியை பார்வையிட செல்வம் அடைக்கலநாதனுக்கு அனுமதி மறுப்பு

By Sujithra Chandrasekara

31 Jan, 2017 | 6:50 pm

பூசா முகாமிலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட கைதியை பார்வையிடச் சென்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குழுக்களின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தங்கவேலு நிமலன் என்ற அரசியல் கைதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் தெரிவத்த செல்வம் அடைக்கலநாதன்…

[quote]பல வருடங்களாக பூசா முகாமில் வைத்திருந்தவர்களை, வேறு சிறைக்கு மாற்றுவதற்காக உண்ணா நோம்பை மேற்கொண்டிருந்தார்கள். நிமலன் என்று அழைக்கபடுகின்ற எங்களுடைய அரசியல் கைதி தனது உண்ணா நோம்பை தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற காரணமாக அவர் கொழும்பு வைத்தியசாலையிலே அனுமதிக்கப்பட்டார். அவரை சந்திப்பதற்காக நாங்கள் வவுனியாவில் இருந்து வந்திருந்தோம். ஆனால் காலையில் வந்ததிற்கு எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது அவரை சந்திப்பதற்கு.[/quote]

இருப்பினும் தேசிய வைத்தியசாலையில் இருந்து அவர் மீண்டும் பூசா முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தங்கவேலு நிமலனின் உறவினர்கள் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தனர்.