டெங்கு ஒழிப்பு தொடர்பில் அடுத்த வாரம் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம் – ஜனாதிபதி

டெங்கு ஒழிப்பு தொடர்பில் அடுத்த வாரம் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம் – ஜனாதிபதி

By Sujithra Chandrasekara

31 Jan, 2017 | 8:02 pm

டெங்கு ஒழிப்பு தொடர்பில் அடுத்த வாரம் புதிய வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

தேசிய பல் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட ஒன்பதுமாடிக் கட்டடம் இன்று திறந்து வைக்ப்பட்டது.

இந்த மாடி கட்டம் 1200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டது.

இதவேளை மற்றுமொரு புதிய கட்டத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.