ஜப்பான் பேரரசரினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு உதய சூரியன் விருது

ஜப்பான் பேரரசரினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு உதய சூரியன் விருது

By Sujithra Chandrasekara

31 Jan, 2017 | 10:18 pm

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஜப்பான் பேரரசரினால் உதய சூரியன் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பேரரசர் மாளிகையில் அக்கிஹிதோ பேரரசரால் இந்த விருதை வழங்குவதற்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் மகளின் மரணத்தினால் அந்த நிகழ்வில் சபாநாயகருக்கு கலந்துகொள்ள முடியவில்லை.

அதன்பிரகாரம் அந்த விருதை வழங்குவதற்கான நிகழ்வு இன்று (31) மாலை கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை பிரஜை ஒருவருக்கு முதல் முதலாக உதய சூரியன் விருது கிடைத்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.