இராஜினாமாக் கடிதத்தை ஒப்படைத்தார் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன

இராஜினாமாக் கடிதத்தை ஒப்படைத்தார் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன

எழுத்தாளர் Bella Dalima

31 Dec, 2016 | 8:11 pm

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றைய தினம் சந்தித்து இராஜாங்க அமைச்சர் தனது இராஜினாமாக் கடிதத்தை ஒப்படைத்ததாக பிரியங்கர ஜயரத்னவின் இணைப்புச் செயலாளர் நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அந்த இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார்.

பிரியங்கர ஜயரத்னவினால் பயன்படுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்கள் நேற்று பிற்பகல் அமைச்சில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்