உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை தயார்: அசோக்க பீரீஸ்

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை தயார்: அசோக்க பீரீஸ்

எழுத்தாளர் Bella Dalima

31 Dec, 2016 | 8:58 pm

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக, குழுவின் தலைவர் அசோக்க பீரீஸ் தெரிவித்தார்.

இன்று முற்பகல் குழுவின் மூன்று உறுப்பினர்களின் கையொப்பத்துடன் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய குழுவில் 5 உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.

குழுவின் தலைவரான அசோக்க பீரீஸ், உறுப்பினர்களான சட்டத்தரணி பாலசுந்தரம் பிள்ளை மற்றும் சட்டத்தரணி உப்புல் குமரப்பெரும ஆகியோர் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

சட்டத்தரணி சாலிய மெத்தியூ மற்றும் சட்டத்தரணி எஸ். மிஸ்பா ஆகியோர் விரைவில் அறிக்கையில் கையொப்பமிடவுள்ளதாக அசோக்க பீரீஸ் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்