மாணவர்கள் உயிரிழப்பு: சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மாணவர்கள் உயிரிழப்பு: சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 3:20 pm

யாழ். கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றத்தில், பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இதன்போது சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி உயிரிழந்தனர்.

ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை விபத்து என பொலிஸார் குறிப்பிட்ட போதிலும், மாணவர்களின் சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் போது, ஒருவருடைய சடலத்தில் துப்பாக்கி சூட்டுக்காயம் காணப்பட்டது.

இதனை அடுத்து, மாணவர்கள் உயிரிழந்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்