நவீன முறையில் பாம்பனில் ரயில்வே செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்படவுள்ளது

நவீன முறையில் பாம்பனில் ரயில்வே செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்படவுள்ளது

நவீன முறையில் பாம்பனில் ரயில்வே செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 8:20 pm

தமிழகத்தின் பாம்பனில் ரயில்வே செங்குத்து தூக்குப்பாலம் நவீன முறையில் அமைக்கப்படவுள்ளது.

இந்தியாவின் நிலப்பகுதியுடன் இராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் கடலில் அமைந்திருக்கும் பாம்பன் ரயில் பாலம் 1914 இல் திறந்து வைக்கப்பட்டது.

பாம்பன் ரயில் பாலத்தை நவீன வசதியுடன் புனரமைப்பு செய்வதற்காக பொறியியலாளர் சுயம்புலிங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட்டார்.

இந்திய ரூபா 40 கோடி செலவில் இந்த தூக்குப்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், நவீன கண்காணிப்பு கெமராவும் பொருத்தப்படவுள்ளதாக இராமேஸ்வரத்தில் உள்ள எமது செய்தியாளர் கூறினார்

மார்ச் மாதம் பாம்பன் ரயில்வே நிலையம் அருகே தூக்குப்பாலத்தைப் பொருத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

புதிய தூக்குப்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன் ரயில் போக்குவரத்து சேவைகளின் வேகம் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்