தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை 206 ஓட்டங்களால் தோல்வி

தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை 206 ஓட்டங்களால் தோல்வி

தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை 206 ஓட்டங்களால் தோல்வி

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 10:22 pm

தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 206 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

போர்ட் எலிசெபெத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில், 240 ஓட்டங்களுடன் இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்தது.

அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 58 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 09 ஓட்டங்களுடனும் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

மேலதிகமாக 06 ஓட்டங்கள் மாத்திரம் பெற்ற நிலையில் அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழந்தார்.

தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 286 ஓட்டங்களைப் பெற்றதோடு இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி, இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த தென்னாபிரிக்கா 06 விக்கெட்டுக்களை இழந்து 406 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்