திருமண நிச்சயத்தை கவிதையாக வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ்

திருமண நிச்சயத்தை கவிதையாக வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ்

திருமண நிச்சயத்தை கவிதையாக வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ்

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 6:08 pm

அமெரிக்க சமூக வலைத்தளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் தனது திருமணம் நிச்சயமாகி விட்டதாக ரெட்டிட் இணையத்தள பக்கத்திலேயே உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை செரீனா கவிதை வடிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒஹானியனும் தானும் முதன்முறை சந்தித்துக்கொண்ட ரோம் நகருக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னிடம் அவர் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாகவும், தான் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் செரீனா தெரிவித்தார்.

இந்த ஆண்டு தனது ஏழாவது விம்பிள்டன் ஒற்றையர் பட்டத்தையும், 22 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனை படைத்த செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார்.

_93177852_93175623_serena

 

 
Source: BBC


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்