டெங்குக் காய்ச்சலால் கல்முனையில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டெங்குக் காய்ச்சலால் கல்முனையில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 9:21 pm

டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த 5 வயது சிறுவன் கல்முனையில் உயிரிழந்த சம்பவம் டெங்கு நுளம்பு ஒழிப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உணர்த்தி நிற்கின்றது.

காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட சிறுவனே தீவிர சிகிச்சைகளின் பின்னர் நேற்று (29) உயிரிழந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

கல்முனை குடி – 16 ஐச் சேர்ந்த அகமது அதீப் என்ற 5 வயது சிறுவனின் உயிரையே டெங்குக் காய்ச்சல் பறித்துள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் 14 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுவன், டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்