சத்திரசிகிச்சை உபகரணங்களின் விலைகளைக் குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானம்

சத்திரசிகிச்சை உபகரணங்களின் விலைகளைக் குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானம்

சத்திரசிகிச்சை உபகரணங்களின் விலைகளைக் குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 3:32 pm

ஔடதங்களின் விலையைக் குறைப்பதுடன் சத்திரசிகிச்சை உபகரணங்களின் விலைகளையும் குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்குத் தேவையான பொறிமுறையைத் தயாரிக்குமாறு தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக கண் வில்லைகளுக்கான விலையைக் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து 6000 ரூபாவிற்கு கண் வில்லைகளைக் கொள்வனவு செய்து, நோயாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கண் வில்லைகளுக்கான விலை நிர்ணயிக்கப்படவுள்ளதோடு, கண் வில்லைகளை 10,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்