கை, கால்களின்றி உலகை வலம் வரும் ஜானிஸ் மெக் டேவிட் இலங்கை வருகை

கை, கால்களின்றி உலகை வலம் வரும் ஜானிஸ் மெக் டேவிட் இலங்கை வருகை

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 4:27 pm

ஜானிஸ் மெக் டேவிட், ஜேர்மனைச் சேர்ந்த 25 வயதான ஊக்கமூட்டும் பேச்சாளர்.

தனது சக்கர இருக்கையிலேயே உலகை வலம் வருபவர்.

இயலாமையைப் பொருட்படுத்தாமல், தனி நபர்கள் தங்களது முழுத்திறனை அடைவது சாத்தியம் என்பதை நிரூபிக்கும் வகையில், அவர் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

ஜானிஸ் மெக் டேவிட்டிற்கு பிறவியிலேயே கை, கால்கள் கிடையாது.

இந்நிலையில், இவர் தற்போது பல்கலைக்கழகம் செல்வதோடு, தனது காரில் உலகின் பல நாடுகளுக்கும் விஜயம் செய்து வருகின்றார்.

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்திற்கு இன்று காலை வருகை தந்த ஜானிஸ் மெக் டேவிட் நியூஸ்லைன் மற்றும் பத்திகட நிகழ்சிகளில் பங்குபற்றியிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்