காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி போராட்டங்கள் முன்னெடுப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி போராட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 8:43 pm

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இருவேறு பகுதிகளில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள பண்டார வன்னியன் உருவச்சிலைக்கு அருகில் இன்று காலை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் புகைப்படம் ஒட்டப்பட்ட மட்டையொன்றை எரியூட்டி இதன்போது எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி திருகோணமலையிலும் அடையாள உண்ணாவிரதப்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளரிடம் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்