உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட ஏற்பாடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட ஏற்பாடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட ஏற்பாடு

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 4:43 pm

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, பெறுபேறுகளை கணனிமயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J.புஷ்பகுமார குறிப்பிட்டார்.

எனினும், இந்த வருடம் தொழில்நுட்பப் பரீட்சையில் 30,000 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன், அவர்களுக்கான செயன்முறைப் பரீட்சையை நடத்த காலதாமதம் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நடத்தப்பட்ட போது பரீட்சை முறைகேடுகள் குறைவாகவே பதிவாகியதாகவும் அவர் கூறினார்.

முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், குற்றமிழைக்காத பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் எவ்வித தாமதமுமின்றி வெளியிடப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J.புஷ்பகுமார குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்