இலட்சக்கணக்கான பறவைகளை அழித்துவிட்ட ஜப்பான்

இலட்சக்கணக்கான பறவைகளை அழித்துவிட்ட ஜப்பான்

இலட்சக்கணக்கான பறவைகளை அழித்துவிட்ட ஜப்பான்

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 7:22 pm

பறவைக்காய்ச்சல் பரவக்கூடும் எனும் அச்சத்தில் ஜப்பானில் இரண்டு இலட்சம் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன.

ஜப்பானின் தென் பகுதியில் உள்ள குமமோட்டோ மாவட்டத்தில் எச் – 5 வைரஸ் பாதிப்பிற்குள்ளான இரண்டு இலட்சம் கோழிகளும் வாத்துக்களும் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு தொற்றுக்குள்ளான பறவைகளை அழிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கையில் சுமார் 400 பேர் வரை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதத்தில், ஜப்பானின் வடக்கில் உள்ள அமோரி மாவட்டத்தில் மாத்திரம் 18,000 பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பண்ணைகளிலும் உள்ள கோழிகள், வாத்துக்களுக்கு எச் – 5 வைரஸ் பாதிப்பு பரவுவதைத் தடுக்கும் விதமாக பறவைகள் அழிப்புப்பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக, ஹொக்கைடோ மாகாணப் பகுதியில் பல்வேறு பண்ணைகளில் 5.5 இலட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.

அந்தப் பகுதியிலிருந்து கோழிகள் மற்றும் வாத்துக்களை வாகனங்களில் வெளியே எடுத்துச்செல்லவும், வெளியிலிருந்து அந்தப் பகுதிக்குள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வடக்கே ஹொக்கைடோ மாகாணம் முதல் தெற்குப் பகுதியில் உள்ள கியூஷு மாகாணம் வரை பல்வேறு இடங்களிலும் பண்ணைப் பறவைகளுக்கு எச் – 5 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதனால், நோய்த்தொற்று நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டு பனிக்காலத்தில் வைரஸ் பாதிப்பு காரணமாக அழிக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்