ATM இயந்திரங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகளைத் திருடிய பல்கேரிய பிரஜைகள் விளக்கமறியலில்

ATM இயந்திரங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகளைத் திருடிய பல்கேரிய பிரஜைகள் விளக்கமறியலில்

ATM இயந்திரங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகளைத் திருடிய பல்கேரிய பிரஜைகள் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 1:26 pm

கெமராக்களை பொருத்தி ATM இயந்திரங்களில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் தரவுகளைத் திருடிய பல்கேரிய பிரஜைகள் நால்வரை காலி மிரிஸ்ஸ பகுதியில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தனியார் வங்கிகளில் டெல்லர் இயந்திரங்களுக்கு மேற்புறமாக இருக்கும் மின் விளக்குகளில் கெமராக்களை பொருத்தி, அவற்றின் ஊடாக வாடிக்கையாளர்களின் தரவுகளை இந்த சந்தேகநபர்கள் திருடியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பல்கேரிய பிரஜைகள் நால்வரும் மாத்தறை பிரதம நீதவான் யுரேஷா டி சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் கோடிக்கணக்கான ரூபா பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் சர்வதேச கொள்ளை கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்