விமல் வீரவங்ச இன்றும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

விமல் வீரவங்ச இன்றும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

விமல் வீரவங்ச இன்றும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 1:12 pm

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தை முறையின்றி பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விமல் வீரவங்சவிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்றும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம் நேற்றும் (28) 5 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரமே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நேற்று பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.

விமல் வீரவங்ச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விடுத்த அறிவித்தலுக்கு அமைவாகவே நீதிமன்றம் அவருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்