மதுபானசாலைகளை அகற்றுமாறு வலியுறுத்தி ஆரையம்பதி மக்கள் ஆர்ப்பாட்டம்

மதுபானசாலைகளை அகற்றுமாறு வலியுறுத்தி ஆரையம்பதி மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 9:05 pm

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியிலுள்ள மதுபானசாலைகளை அகற்றுமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புகளின் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்கான மகஜர் ஒன்றை மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளரிடம், ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்