பிரபல ஹொலிவுட் நடிகை டெபி ரெனோல்ட்ஸ் காலமானார்

பிரபல ஹொலிவுட் நடிகை டெபி ரெனோல்ட்ஸ் காலமானார்

பிரபல ஹொலிவுட் நடிகை டெபி ரெனோல்ட்ஸ் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 5:25 pm

பிரபல ஹொலிவுட் நட்சத்திரமான டெபி ரெனோல்ட்ஸ் தனது 84 ஆவது வயதில் நேற்றைய தினம் இயற்கை எய்தியுள்ளார்.

“Singin’ in the Rain,” பாடல் மூலம் பல மில்லியன் இதயங்களை தன்வசம் கட்டியிழுத்த டெபியின் மறைவு அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல ஹொலிவுட் நடிகையான ரெனோல்ட்ஸ் நேற்றைய தினம் லொஸ் ஏஞ்சல்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் ரொட் பிஷர் தெரிவித்துள்ளார்.

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே டெபி ரெனோல்ட்ஸ் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் டெபி ரெனோல்ட்ஸின் மகளும் நடிகையுமான கெரி பிஷர் மாரடைப்பினால் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The Unsinkable Molly Brown திரைப்படத்திற்காக 1964 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதையும் டெபி ரெனோல்ட்ஸ் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்