சம்பூரில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

சம்பூரில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

சம்பூரில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 1:06 pm

திருகோணமலை சம்பூர் கடலில் குளிக்கச்சசென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மது போதையில் கடலில் குளிக்கச்சென்ற ஒருவரே நேற்று மாலை நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் கரைப்பகுதியிலிருந்து நீண்ட தூரம் கடலில் நீந்திச் சென்றுள்ளதால் மீண்டும் கரைக்குத் திரும்பமுடியாமல் போயிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

சமபூர் பகுதியை சேர்ந்த 50 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்