கிவுலேகம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கிய மக்கள் சக்தி

கிவுலேகம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கிய மக்கள் சக்தி

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 8:59 pm

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு திட்டம் இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

நீர் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று…

எனினும் மொனராகலை ஹம்பேகமுவ கிவுலேகம மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி நீண்டகாலமாக இன்னல்களை எதிர்நோக்கியிருந்தனர்.

மக்களின் குறைகளை நீக்கும் மக்கள் சக்தி திட்டத்தினூடாக டொக்டர் ஜயந்த விஜயரத்ன மற்றும் இரோமி பீரிஸ் ஆகியோர் இந்த திட்டத்திற்கு உதவி புரிந்தனர்.

சிறுநீரக நிவாரணத்திற்கான ஜனாதிபதி செயலணி மற்றும் கடற்படையின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக இன்று மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டம் – இரண்டாம் கட்டத்தினூடாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாதபட்சத்தில், மக்கள் சக்தி செயற்றிட்டத்தினூடாக அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பலர் வருகை தந்திருந்தனர்.

தங்களின் பிரச்சினைக்கும் தீர்வு வழங்குமாறு கோரி கலவெல்கம கிராம மக்கள், கிவுல்கமவில் நடைபெற்ற இன்றை நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்