ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெறுவதற்கு பொருளாதார விவகாரங்கள் அமைச்சு விலைமனு கோரல்

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெறுவதற்கு பொருளாதார விவகாரங்கள் அமைச்சு விலைமனு கோரல்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 8:35 pm

தேசிய கொள்கைகைள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு 2017 ஆம் ஆண்டுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெறுவதற்கான விலை மனுவை கோரியுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பயன்படுத்த எண்ணியுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வருட அபிவிருத்தி திட்டங்களுக்காக 300 தொடக்கம் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறறுக் கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

உள்நாட்டு வங்கிகள் சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கான விலைமனுவை முன்வைத்துள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் உள்ள வெளிநாட்டு வள திணைக்களம் தெரிவித்தது.

இந்த கடனை செலுத்துவதற்கான காலம் மூன்று வருடம் அல்லது அதற்கு அதிக காலம் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நிலையான வட்டி வீதத்தினையோ இலண்டன் சர்வசே வங்கி வட்டி வீதம் மற்றும் தளம்பல் வட்டி வீதத்தில் விலை மனுவை முன்வைக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுக்கல் வாங்கலுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை இலங்கை அரசாங்கமே எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சு குறித்த யோசனை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்கும் உரிமை அரசாங்கத்திடமே உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்