அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேல் மாகாண சபையிலும் நிராகரிப்பு

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேல் மாகாண சபையிலும் நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 4:36 pm

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேல் மாகாண சபையிலும் இன்று நிராகரிக்கப்பட்டது.

சட்டமூலம் தொடர்பில் விவாதத்தை நடத்துவது தொடர்பில் இதன் போது அமைதியின்மை ஏற்பட்டது.

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பின் போது 52 பேர்அதற்கு எதிராக வாக்களித்தனர்.

ஆதரவாக 28 பேர் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.

சுசில் கிந்தெல்பிட்டிய மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் நிசாந்த ஶ்ரீ வர்ணசிங்க உள்ளி்ட்ட ஐவர்
வாக்களிக்கவில்லை

இது வரையில் 8 மாகாண சபைகள் இந்த சட்டமூலத்தை நிராகரித்துள்ளதுடன் கிழக்கு மாகாண சபையில் இது வரையில் இந்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்