அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க தீர்மானம்

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க தீர்மானம்

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 10:39 am

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை வி.கே.சசிகலாவிடம் ஒப்படைக்க கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

வி.கே.சசிகலாவிடம் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பதாக முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்து இணக்கம் தெரிவித்தனர்.

சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசுவத்துடன் பணியாற்ற பொதுக்குழு உறுதியளிப்பதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானதை அடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றாமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்