அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க சசிகலா ஒப்புதல்

அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க சசிகலா ஒப்புதல்

அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க சசிகலா ஒப்புதல்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 7:53 pm

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக பதியேற்பதற்கு, சசிகலா நடராஜன் ஒப்புதளித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக, சசிகலா நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார்.

அதிமுக தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா நடராஜனின் பெயர் முன்மொழியப்பட்டு, அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்தன.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட குழுவினரால் கையளிக்கப்பட்ட தீர்மான நகலை சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டு, பொதுக்குழுவின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர், தலைமைப் பொறுப்பை ஏற்று கட்சியை வழிநடத்துமாறு சசிகலா நடராஜனிடம் வலியுறுத்தினர்.

கட்சி பொதுக்குழுவில் இன்று நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் தொடர்பாகவும் இந்த குழுவினர் சசிகலாவுக்கு விளக்கமளித்ததாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, அதிகமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அதிமுக தொண்டர்களை அமைதிகாக்குமாறு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்