தொடரந்தும் மாகாண சபைகளினால் நிராகரிக்கப்படும் சிறப்பு அமைச்சுக்கான சட்டமூலம்

தொடரந்தும் மாகாண சபைகளினால் நிராகரிக்கப்படும் சிறப்பு அமைச்சுக்கான சட்டமூலம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2016 | 8:09 pm

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளிலும் இன்று நிராகரிக்கப்பட்டது.

மத்திய மாகாண சபை அமர்வு இன்று அவைத் தலைவர் எல்.டி.நிமலசிறி தலைமையில் நடைபெற்றது.

இதன் போது சபையில் ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக சபை நடவடிக்கைகளை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபை முதல்வர் தீர்மானித்ததுடன் பின்னர் மீண்டும் அமர்வு ஆரம்பமானது.

எதிர்க்கட்சித் தலைவர் ரேணுகா ஹேரத் மீண்டும் கருத்து தெரிவிக்க முற்பட்ட போது, இடையூறு விளைவிக்கப்பட்டமையால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 29 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

நான்கு உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

இதேவேளை, வட மேல் மாகாண சபையிலும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் 20 மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 11 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இதுவரை 7 மாகாண சபைகளில் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்