முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2016 | 7:44 pm

மத்திய வங்கியின் முறிகல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இன்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க….

[quote]மத்திய வங்கி கொடுக்கல் வாங்கல் மோசடியில் பாரிய நிதி கொள்ளையிடப்பட்டுள்ளது. 13 பில்லியன் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் மத்திய வங்கி ஆளுனரின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பாரிய சூழ்ச்சியே இது என நாம் கருதுகின்றோம். அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். நீதிமன்றம் நியாயத்தை நிலைநாட்டாவிடின் ஜனாதிபதி அது தொடர்பில் செயற்படுவார்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்