முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க காலமானார்

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க காலமானார்

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2016 | 1:20 pm

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று (27) காலமானார்.

1960 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த ரத்னசிறி விக்ரமநாயக்க, 1962 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார்.

பிரதி நீதிஅமைச்சராகவும், நீதி அமைச்சராகவும் செயற்பட்ட அவர், பெருந்தோட்ட மற்றும் பொது நிர்வாக அமைச்சராகவும் செயற்பட்டிருந்தார்.

ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இரண்டாவது அரசியல் பயணம் மேல் மாகாண சபையிலேயே ஆரம்பமானது.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் பிரதமராக செயற்பட்ட அவர், மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்திலும் பிரதமராக பதவி வகித்தார்.

பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவராக செயற்பட்ட ரத்னசிறி விக்ரமநாயக்க உயிரிழக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்பட்டார்.

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவூடல் நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்