118 பயணிகளுடன் சென்ற லிபிய விமானம் கடத்தப்பட்டது

118 பயணிகளுடன் சென்ற லிபிய விமானம் கடத்தப்பட்டது

118 பயணிகளுடன் சென்ற லிபிய விமானம் கடத்தப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2016 | 5:50 pm

118 பயணிகளுடன் சென்ற லிபிய விமானமொன்று கடத்தப்பட்டுள்ளது.

லிபிய பயணிகள் விமானம் 118 பேருடன் மோல்ட்டாவில் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அது கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மோல்ட்டா பிரதமர் தெரிவித்துள்ளார்.

A320 ரக விமானம், லிபியாவுக்குள் பறந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விமானம், நடுவழியில் திசை மாற்றப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடத்தல்காரர்கள் விமானத்தை குண்டு வைத்து தகர்த்து விடுவதாக விமானத்தில் உள்ளவர்களை மிரட்டி அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மோல்ட்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் சட்டவிரோத இடையூறு ஏற்பட்டிருப்பதாக மோல்ட்டா சர்வதேச விமான நிலையம், ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

அவசர கால படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்