​மெக்சிக்கோ பட்டாசு விற்பனை சந்தை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

​மெக்சிக்கோ பட்டாசு விற்பனை சந்தை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

​மெக்சிக்கோ பட்டாசு விற்பனை சந்தை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 2:42 pm

மெக்சிக்கோ பட்டாசு விற்பனை சந்தையில் இடம்பெற்ற வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தடயவியல் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மெக்சிகோவின் வடக்கு புறநகர் பகுதியில் பட்டாசு பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற சான் பப்லிடோ சந்தைத் தொகுதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதுடன் குறித்த பகுதியில் கடந்த 11 வருடங்களினுள் இடம்பெற்ற மூன்றாவது விபத்து இதுவாகும்.

கிறிஸ்மஸ் கொள்வனவில் ஈடுபட்டிருந்த பெருமளவிலான மக்கள் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

தடயவியல் நிபுணர்கள் , வைத்தியர்கள் , பொலிஸார் , மீட்பு பணியாளர்களும் சம்பவ இடத்தில் கூடியுள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற 4.5 ஹெக்டெயர் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு வருவதாகவும் அந்த நாட்டு உள்துறை அமைச்சர் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்