வட மத்திய மாகாண அம்பியூலன்ஸ் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

வட மத்திய மாகாண அம்பியூலன்ஸ் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

வட மத்திய மாகாண அம்பியூலன்ஸ் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 10:53 am

வட மத்திய மாகாண அம்பியூலன்ஸ் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதில் உள்ள குளறுபடிகளுக்கு எதிராகவே இந்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன் தங்களிள் கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி நேற்று மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்த பண்டாரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத விதத்தில் செயற்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக இராணுவ சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்த பண்டார தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்