லிந்துலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

லிந்துலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 10:16 am

லிந்துலை ஊவாகலை தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று மாலை 5.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்த பவுசர் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பான காணொளி…

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்