முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஆரம்பம்

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஆரம்பம்

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 2:01 pm

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகள் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டிற்குள் ஆரம்பிக்கப்படும் என வீதிப் பாதுகாப்பிற்கான தேசிய சபை கூறியுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட குறிப்பிட்டார்.

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் நடைமுறைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடனான கலந்துரையாடல்களில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் முச்சக்கர வண்டி சங்கப் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சில் கடந்தவாரம் இதுதொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி சங்கங்களுடன் தனித்தனியே கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும், அவர்களது ஆலோசனைகளையும் ஆராய்ந்து உள்வாங்குவதற்குரிய செயற்பாடுகளும் சமாந்திரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கமைய முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளை சட்டபூர்வமாக்குதல், உள்ளடக்கப்படும் விடயங்களை தீர்மானித்தல் மற்றும் கொள்கைகள் குறித்து தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்