நுரைச்சோலையில் செயலிழந்த முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை

நுரைச்சோலையில் செயலிழந்த முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை

நுரைச்சோலையில் செயலிழந்த முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 11:08 am

எதிர்காலத்தில் அனல் மின் உற்பத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு நேரிடும் என மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலவும் வரட்சியான காலநிலையுடன் நீர்மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமையின் கீழ் எரிசக்தி மூலமான மின் உற்பத்திக்காக அதிக செலவீனம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டார்.

இதேவேளை, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயலிழந்துள்ள முதலாவது மின்பிறப்பாக்க இயந்திரத்தை ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்