நவம்பர் மாதம் கம்பஹாவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

நவம்பர் மாதம் கம்பஹாவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

நவம்பர் மாதம் கம்பஹாவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 12:19 pm

கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கம்பஹாவில் பொதுச் சந்தை ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொதுச் சந்தையில் பணியாற்றி வந்துள்ளதுடன் அவர் தந்திரிமலை பகுதியில் வயல் ஒன்றில் மறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 491,000 ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மொத்த பெறுமதி 940,000 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சந்தேக நபர் இந்த பணத்தில் 200,000 ரூபா பெறுமதியான காணி ஒன்றை கொள்வனவு செய்துள்ளதுடன் 65,000 ரூபா செலுத்தி தவணை முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கொள்வனவு செய்துள்ளார்.

அத்துடன் கம்பஹா யக்கல, காட்டு பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் 400,000 ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்