சிரச நத்தார் வலயத்தின் மூன்றாம் நாள் இன்று

சிரச நத்தார் வலயத்தின் மூன்றாம் நாள் இன்று

சிரச நத்தார் வலயத்தின் மூன்றாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 8:23 pm

உதயமாகும் நத்தாரை கொண்டாட முழு நாட்டையும் அலங்கரிக்கும் வகையில் சிரச நத்தார் வலயத்தின் மூன்றாம் நாள் இன்றாகும்.

கொழும்பு 02, பிரேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள நத்தார் வலயம், காலி பேராயர் பேரருட்திரு ரேமன்ட் விக்மரசிங்க தலைமையில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

பரிசுத்தப் பாப்பரசர் பிரான்சிஸினால் ஆசிர்வதிக்கப்பட்டு வத்திக்கானில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித அன்னை மரியாளின் திருச்சொரூபத்தை வழிபடும் வாய்ப்பு, சிரச நத்தார் வலயத்திற்கு வருகை தந்தவர்களுக்கு இன்றும் கிட்டியது.

நத்தார் வலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், பிரம்மான்டமான நத்தார் மரமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முப்படையினரின் கரோல் இசை நிகழ்ச்சி, மேடை நாடகங்கள் உள்ளிட்ட மேலும் பல நிகழ்ச்சிகளும் இம்முறை நத்தார் வலயத்தை அலங்கரிக்கின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்