இலங்கையை வறுமையில் இருந்து மீட்கும் தேசிய திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

இலங்கையை வறுமையில் இருந்து மீட்கும் தேசிய திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 7:28 pm

இலங்கையை வறுமையில் இருந்து மீட்கும் தேசிய திட்டம் தொடர்பில், இன்று ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையில் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

2030 ஆம் ஆண்டாகும் போது, வறுமையற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கில் பூகோள நிரந்தர அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, 2017 ஆம் ஆண்டில் இருந்து திட்டங்களை வகுப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

வரட்சி காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தகவல் அறியும் உரிமை தொடர்பிலான ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியிடம் இருந்து நியமனக்கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் ஏ.டபிள்யூ.ஏ.சலாம் மற்றும் கலாநிதி செல்வி திருச்சந்திரன் ஆகியோரே ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரசாத் டெப் இன்று முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்