அம்பலாங்கொடை கிராமிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து

அம்பலாங்கொடை கிராமிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 2:25 pm

அம்பலாங்கொடை கிராமிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று (22) காலை தீ பரவியுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கட்டில் ஒன்றில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி அருகிலிருந்த உபகரணங்களிலும் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்பு படைப்பிரிவினருடன் வைத்தியசாலை வட்டாரமும் ஒன்றிணைந்து தீயைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அங்கிருக்கும் நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தீ விபத்தில் சேதமடைந்த பொருட்கள் தொடர்பில் இதுவரை எந்த விதத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்