மெக்சிகோ வெடிபொருள் சந்தையில் வெடி விபத்து: 29 பேர் பலி, 72 பேர் படுகாயம்

மெக்சிகோ வெடிபொருள் சந்தையில் வெடி விபத்து: 29 பேர் பலி, 72 பேர் படுகாயம்

மெக்சிகோ வெடிபொருள் சந்தையில் வெடி விபத்து: 29 பேர் பலி, 72 பேர் படுகாயம்

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 5:23 pm

மெக்‌சிகோவில் உள்ள வெடிபொருள் விற்பனை சந்தையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன், 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மெக்‌சிகோவின் தலைநகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டேல்பேரிடோ வான வேடிக்கை சந்தையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கால விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான பட்டாசுகள் இதன்போது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

இதனால், அந்த இடம் முற்றிலுமாக புகை சூழ்ந்து காணப்பட்டது.

அருகிலிருந்த கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், 29 பேர் உடல் கருகி இறந்துள்ளனர்.

72 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்