பெர்லின் சந்தையில் இடம்பெற்ற லொறி தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

பெர்லின் சந்தையில் இடம்பெற்ற லொறி தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

பெர்லின் சந்தையில் இடம்பெற்ற லொறி தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 6:01 pm

ஜெர்மனியின் பெர்லின் நகரில் கிறிஸ்மஸ் சந்தைக்குள் லொறியினைச் செலுத்தி 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பெர்லினில் உள்ள கெய்சர் வில்ஹெம் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய கிறிஸ்மஸ் சந்தையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்த சந்தையில், பண்டிகையை முன்னிட்டு பொருட்களை வாங்கக் குவிந்திருந்தனர்.

இதன்போது, கம்பிகளை ஏற்றிக்கொண்டு சந்தைக்குள் தாறுமாறாகப் பிரவேசித்த கனரக லொறி ஒன்று, மக்கள் மீது ஏறியதில் 12 பேர் உயிரிழந்ததுடன், 48 பேர் காயமடைந்தனர்.

இது தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகித்து, விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தாக்குதலை தாங்கள் தான் மேற்கொண்டதாக ஐ.எஸ். இயக்கம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். இயக்கத்தின் அமாக் செய்தி நிறுவனம், லொறியிலிருந்து தப்பிச்சென்ற நபர் தமது படை வீரர் தான் என தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்