நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவு

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவு

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 7:42 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 20 நாட்கள் விசேட ஜூரி சபையால், கொழும்பு மேல் நீதிமன்ற பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் இதன்போது 25 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

பிரதிவாதிகள் சார்பில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் நாளை (22) ஆஜராகுமாறு அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிலந்த ஜயவர்தனவிற்கு இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சேனாபதி லியனகே, நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் 31 ஆவது சாட்சியாளராக இன்று சாட்சியம் வழங்கியிருந்தார்.

நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு, ஆயுதமேந்திய புலனாய்வுப் படையினர் கருணா அம்மான் தரப்பினருக்கு வழங்கிய ரி – 56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டதாக அவர் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, இராணுவ நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் குமார ரத்நாயக்கவும் இன்று சாட்சியமளித்துள்ளார்.

இராணுவப் படையணி நிலையத்தின் ஆயுதமேந்திய புலனாய்வுப் பிரிவினரால், நட்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட T 56 ரக துப்பாக்கியே இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்