தபால் தொழிற்சங்கங்களின் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

தபால் தொழிற்சங்கங்களின் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

தபால் தொழிற்சங்கங்களின் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 3:39 pm

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்கங்கள் நேற்று (20) ஆரம்பித்த 48 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

இதனையடுத்து, நாட்டின் பல பகுதிகளிலுள்ள தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

பண்டிகைக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிப்பகிஷ்ரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்தில் தபால்கள் குவிந்துள்ளன.

இந்நிலையில், அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன புஷ்பகுமார கூறினார்.

விடுமுறை இரத்து செய்யப்பட்ட போதிலும், தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப்போவதில்லை என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் குறிப்பிட்டது.

21,000 ற்கும் அதிகமான ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்