தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நள்ளிரவுடன் நிறைவு: சுமார் 10 இலட்சம் கடிதங்கள் குவிந்துள்ளன

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நள்ளிரவுடன் நிறைவு: சுமார் 10 இலட்சம் கடிதங்கள் குவிந்துள்ளன

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 8:42 pm

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

இதுவரையில் சுமார் 10 இலட்சம் கடிதங்களும் பொதிகளும் மத்திய தபால் பரிமாற்றகத்தில் குவிந்து காணப்படுகின்றன.

இரண்டு நாளாக முன்னெடுக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பில் நாடு பூராகவும் உள்ள 653 தபால் நிலையங்களினதும் 3000 உப தபால் நிலையங்களினதும் ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்களின் 7 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு கொண்டுசெல்ல, பேரணியாக சென்றமையினால் கொழும்பு லோட்டஸ் வீதியின் போக்குவரத்து இன்று பகல் 2 மணித்தியாலங்கள் தடைப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஐந்து பிரதிநிதிகளுக்கு மகஜரைக் கையளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, இரண்டாவது நாளாகவும் நாட்டிலுள்ள தபால் நிலையங்களும் உப தபால் நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

21 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் கலந்துகொண்டிருந்ததாக தபால் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்