க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 3:32 pm

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் 12 ஆம் திகதி விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளின் முதற்கட்டம் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J. புஷ்பகுமார தெரிவித்தார்.

இரண்டாவது கட்டம் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 30 ஆம் திகதி இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடையும் என அவர் குறிப்பிட்டார்.

இம்முறை ஒரு கோடியே 58 இலட்சம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டது.

இதற்காக 62 ஆயிரம் மதிப்பீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்