உத்தேச அரசியலமைப்பின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி

உத்தேச அரசியலமைப்பின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 8:09 pm

உத்தேச அரசியலமைப்பின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய இராணுவப் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

தான் எவ்வேளையிலும் இராணுவத்தினருக்காக முன்நிற்பதாக இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரச தலைவர் ஒருவரை சந்திப்பதற்கு தமக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவென இராணுவ சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்