இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மோடிக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மோடிக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மோடிக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 3:19 pm

இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 7 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் (20) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் 109 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அத்துடன், மீனவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரம் பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண், வாய் மற்றும் காதுகளை மூடியவாறு நூதன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது தமிழக செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்