ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளது: அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளது: அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளது: அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 3:50 pm

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நெல்லுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என சங்கத்தின் ஏற்பாட்டாளர் நிஷாந்த பண்டார அத்தநாயக்க கூறினார்.

இருப்பினும், பாரியளவில் அரிசி விற்பனையில் ஈடுபட்டுள்ள சில வர்த்தகர்கள் அதிகளவிலான நெல்லை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், திட்டமிட்ட வகையில் நெல்லுக்கான தட்டுப்பாடு நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை சிறிய மற்றும் மத்திய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

போதியளவு நெல் கிடைக்காமையால் ஆலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்